What is Digital Marketing in Tamil
நாம் இந்த பதிவின் மூலம் மார்க்கெட்டிங் என்றால் என்ன, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன, டிரடிஷனல் மார்க்கெட்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இடையே உள்ள வித்தியாசங்களை காண்போம்.
Digital Marketing
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதனை பார்ப்பதற்கு முன்பாக மார்க்கெட்டிங் என்றால் என்ன என்பதனைப் பார்க்க வேண்டும் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருள் அல்லது சர்வீஸை பற்றி அதன் முழு விவரங்களையும் அனைத்து மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதே மார்க்கெட்டிங் ஆகும்.
அதேபோல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இன்டர்நெட் பயன்படுத்தி இணையதளம் வழியாக செய்யப்படும் அனைத்து விளம்பரம் முறைகளும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும். நாம் மார்க்கெட் செய்வது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணமாக Product and Services, Places, Person, Informations and Ideas, மற்றும் இன்னும் பல துறைகள் சார்ந்த தகவல்களை பற்றி அனைவரிடமும் இணையம் வழியாக கொண்டு சென்று சேர்க்கப் பயன்படும் துறையை டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
Traditional Marketing Vs Digital Marketing
நாம் விளம்பரங்களை முதலில் செய்தித்தாள்களில் படித்தோம், பிறகு ரேடியோவில் விளம்பரங்களை கேட்டோம், அதன்பிறகு இன்னும் வளர்ச்சி பெற்று டிவியில் விளம்பரங்களை பார்த்தோம் இதுதான் ட்ரெடிஷனல் மார்க்கெட்டிங். அதன் பிறகு நாம் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி பெற்று நம்முடைய கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல்களில் விளம்பரங்களை பார்த்தோம் இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஆகும் செலவு ட்ரெடிஷனல் மார்க்கெட்டிங்கில் ஆகும் செலவை விட மிகவும் குறைவு ஆகும். அதனால்தான் அனைத்துக் கம்பெனிகளும் தனது மார்க்கெட்டிங் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று மாற்றிக் கொண்டு வருகின்றது.
அடிஷனல் மார்க்கெட்டிங் மூலமாக ஒரு கம்பெனிக்கு மார்க்கெட்டிங் செய்ய குறைந்தபட்சம் ஒரு இரண்டு லட்சம் செலவாகின்றது என்றால் அதை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செய்யும்போது 20 முதல் 30% பணம் மட்டுமே செலவாகின்றது அதனாலே அனைவரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் விளம்பரம் ஏற்படுத்தி தங்களது ஒரு குறிப்பிட்ட கம்பெனி அல்லது கார்ட் அட்டை விளம்பரம் செய்கின்றனர்.
இருந்தபோதிலும் இன்றும் பல நிறுவனங்கள் டிரடிஷனல் மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி விளம்பரம் செய்து கொண்டு வருகின்றனர்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணம் மிகவும் குறைவு ஏனென்றால் நம்முடைய டார்கெட் ஆடியன்ஸ் ஒரு குறிப்பிட்ட வயதை உடையவர்கள் உதாரணமாக 20 முதல் 30 வயதுடைய நபர்கள் மட்டும் டார்கெட் செய்து அவர்களுக்கு ஏற்றவாறு மார்க்கெட்டிங் செய்கிறோம் பணம் அதிகமாகும் நாம் விளம்பரங்களை நியூஸ்பேப்பர் தொலைக்காட்சி போன்றவற்றில் வழிவகை செய்வோம் அதனால் அனைவரும் பார்ப்பார்கள் ஒரு குறிப்பிட்ட வயதினர் மட்டும் பார்க்க வைக்க முடியாது அதனால் பணம் அதிகமாகும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகம் முழுவதும் செய்ய கூடிய மார்க்கெட்டிங் ஆகும், உதாரணமாக நீங்கள் ஒரு டூர் பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் அதனை உலகம் முழுவதும் விளம்பரம் செய்யலாம் இணையம் வழியாக அதேபோல் ட்ரெடிஷனல் மார்க்கெட்டிங்கில் நாம் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியும்படி மட்டும் தான் லோக்கல் மார்க்கெட்டிங் மட்டும்தான் செய்ய முடியும்.
What Is Targeting In Digital Marketing
டார்கெட்டிங் என்பது டார்கெட் செய்யும் நபர் ஆண் பெண் இளைஞர்கள் முதியவர்கள் யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம் நாம் ஒரு குறிப்பிட்ட வயதினரை மட்டும் தான் டார்கெட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு நாம் விளம்பரங்கள் செய்து ஒரு குறிப்பிட்ட மட்டும் டார்கெட் செய்யலாம். இதனை ட்ரெடிஷனல் மார்க்கெட்டிங் வழியாக செய்ய இயலாது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வழியாக ஒருவருக்கு ஒரு பொருள் பிடித்திருக்கிறது என்றால் அவர்களுக்கு ஏற்றவாறு அந்த பொருளைப்பற்றி விளம்பரங்களை ஏற்படுத்தலாம் அதன் மூலம் அந்த பொருளை வாங்க செய்யலாம் ஆனால் இதனை டிரெடிஷனல் மார்க்கெட்டிங் மூலம் செய்ய இயலாது ஏனென்றால் ட்ரெடிஷனல் மார்க்கெட்டிங் மூலம் விளம்பரங்களை ஏற்படுத்த வேண்டும் என்றால் அனைவருக்கும் பொதுவாக தான் ஏற்படுத்த முடியும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் விளம்பரங்களை ஏற்படுத்த முடியாது.
What Is Retargeting In Digital Marketing
ரீடார்கெட்டிங் என்றால் நாம் ஒரு வெப்சைட்டிற்கு சென்று ஒரு கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் வாங்க அதனைப்பற்றி விளம்பரங்களை பார்க்க வெப்சைட் செல்கிறோம் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு பின்பு வெப்சைட்டை வெளியே வந்து விடுகிறோம் அதன் பிறகு நாம் அடுத்ததாக Facebook, Twitter, Instagram, YouTube போன்ற சமூக வலைத்தளங்களுக்கு செல்லும்போது நம் வெப்சைட்டில் பார்த்த அதே மொபைல், கம்ப்யூட்டர்கள் அல்லது அதைச் சார்ந்த வேறு பொருட்கள் இந்த சமூக வலைத்தளங்களின் வழியாக விளம்பரமாக பார்க்க முடியும் இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை ஆகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது 99 சதவீதம் மார்க்கெட்டிங் மற்றும் மீது உள்ள ஒரு சதவீதம் மட்டுமே டிஜிட்டல் டெக்னாலஜி ஆகும்.
இந்த 99 % உங்களுடைய கன்டென்ட் மற்றும் ப்ராடக்ட் எப்படி இருக்கிறது மற்றும் நீங்கள் ஏற்படுத்தும் விளம்பரம் எப்படி இருக்கிறது அவை எப்படி மக்களை ஈர்க்கின்றன அதை பொறுத்தே டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
மீதி உள்ள ஒரு சதவீதம் டெக்னாலஜி என்பது உங்கள் பொருட்களை பற்றி எப்படி விளம்பரத்தை Facebook Twitter Instagram YouTube LinkedIn WhatsApp மூலமாக ஷேர் செய்து அதனை எப்படி டிஜிட்டல் வழியாக விளம்பரம் செய்கிறீர்கள் என்பதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும். உங்கள் கன்டெனட் சோஷியல் மீடியாக்கள் மற்றும் இணையங்களில் வழியாக ஷேர் செய்து அதனை எப்படி அனைத்து மக்களிடமும் அந்தப் பொருளைப் பற்றிய முழு தகவல்களையும் கொண்டு சேர்க்கிறீர்கள் என்பதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.

0 Comments